கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் அண்ணா நூலகத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஓவிய கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறை இணையதளத்திற்கு கட்டணம் செலுத்தவில்லை என்பது தவறு. மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசுதான் நிலுவை வைத்துள்ளது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க தடை போடுகிறார்கள்.

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றால் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை அரை மணி நேரத்தில் ஒதுக்குகிறோம் என மத்திய அரசு கூறுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நம் மாணவர்கள் எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய முடியும், நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதனால்தான் தொடர்ச்சியாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றது. அந்த 29 பைசா வைத்துக் கொண்டு என்ன செய்வது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here