மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்த நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்காத நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததற்கு திமுக தான் காரணம் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி தெரிவித்துள்ளார்

download 1

மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து வரும் திட்டங்களை பாஜக வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற தொகுதிகளில் கூட செயல்படுத்துவதில்லை என்றும் மாநில அரசின் பங்களிப்பை கொடுக்காமல் ஒரே ஒரு செங்கலை காண்பித்து அரசியல் செய்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை தவறவிட்டு விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மக்களுக்கான திட்டங்களையும் நிதியையும் கொண்டு வருவதில் அரசியல் செய்தால் அது மக்களை தான் பாதிக்கும் என்றும் அதைதான் திமுக செய்து கொண்டு இருக்கிறது என்றும் விஜயதாரிணி தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here