மகாராஷ்டிராவில் குழாய் நீரை குடித்த 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நந்தட் மாவட்டத்தில் உள்ள முகுவான்தாண்டா கிராமத்தில் மொத்தம் 107 வீடுகள் உள்ளன. சுமார் 500 பேர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கிணற்றில் உள்ள தண்ணீரை குடித்தனர்.
அதே நேரத்தில், பலர் வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டனர். 93 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிராமத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால், சுகாதாரத்துறையினர் அங்கு பார்வையிட்டு மாற்று குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்