லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இதற்கிடையில் ,தற்போது , நயன்தாரா புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சர்தார் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் சமீபகாலமாக அதிகளவில் வியாபாரங்களில் முதலீடு செய்து வருகிறார் நயன்தாரா. முன்னணி தேநீர் கடை ஒன்றில் பங்குதாரராக இருக்கும் நயன்தாரா, அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின் ஆகியவற்றை விற்பனை செய்யும் தொழில்களையும் செய்து வருகிறார். தன்னுடைய 9 ஸ்கின் பிராண்ட் அழகு சாதனப் பொருட்கள் இப்போது கனடாவிலும் கிடைக்கும் படி புதிய கடை ஒன்றை நயன்தாரா திறந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.